கொழும்புக்கு நீர் விநியோகிக்கும் குழாயில் வெடிப்பு

கொழும்பு,ஜுன் 12

லபுகம மற்றும் கலட்டுவாவ நீர்த்தேக்கங்களில் இருந்து கொழும்புக்கு நீர் விநியோகிக்கும் பாரிய குழாயொன்று இன்று (12) காலை வெடிப்புக்குள்ளாகியுள்ளது.

ஹங்வெல்ல நகருக்கு அருகில் குறித்த குழாய் வெடிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் சுமார் 8 அடி உயரத்திற்கு குழாய் நீர் பரவியதுடன், பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அறியமுடிகிறது.

அத்துடன், லோலெவல் வீதியின் ஒரு பகுதியில் சுமார் 15 அடி ஆழத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், அவ்வீதியூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

Leave a Reply