
தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்களை திட்டமிட்ட முறையில் விநியோகிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
நிலவும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அரச செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வது தொடர்பாக தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் தற்போது இடம்பெற்று வருகிறது.
இந்த கலந்துரையாடல் கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருகிறது.
இந்த கலந்துரையாடலில் நிதி, பொதுநிர்வாக மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர்கள், மத்திய வங்கியின் ஆளுநர், அதிகாரிகள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





