பொலிஸாரை தாக்குபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

கொழும்பு,ஜுன் 18

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்குபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அவ்வாறான இடங்களில் கடமை எல்லை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விநியோகம் இடம்பெறாத காரணத்தினால் பொலிஸாருடன் மோதலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அனைத்து மக்களிடமும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Leave a Reply