ஒரு வருடத்திற்கும் மேலாக நீர்கட்டணத்தை செலுத்தாத வாடிக்கையாளர்கள்

கொழும்பு,ஜுன் 19

ஒரு வருடத்திற்கும் அதிக காலம் நீர்கட்டணத்தை செலுத்தாமல் 50,000க்கும் அதிகமான நுகர்வோர் உள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அவர்களிடம் இருந்து 532 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற வேண்டும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி வணிக பொது முகாமையாளர் பியல் பத்மனாத தெரிவித்தார்.

தற்போது குறித்த நுகர்வோருக்கு அறிவித்தல் விடுத்து நீர் விநியோகத்தை துண்டிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையிடம் இருந்து 2.8 மில்லியன் நுகர்வோர் நீரை பெறுகின்றனர்.

அவர்களில் 92 சதவீதமானோர் வீட்டு பாவனைக்காக நீரை பெறுகின்றனர்.

குறித்த தொகையில் 75 சதவீதமானோர் 25 அலகுகளுக்கும் குறைவான நீரை பயன்படுத்துகின்றனர்.

இந்தநிலையில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு 7,500 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற வேண்டியுள்ளதாக அதன் பிரதி வணிக பொது முகாமையாளர் பியல் பத்மனாத தெரிவித்தார்.

Leave a Reply