முத்துராஜவெல பிரதேசத்தில் உள்ள காணியொன்றை இலங்கை மின்சார சபைக்கு வழங்க அமைச்சரவை அனுமதி!

<!–

முத்துராஜவெல பிரதேசத்தில் உள்ள காணியொன்றை இலங்கை மின்சார சபைக்கு வழங்க அமைச்சரவை அனுமதி! – Athavan News

முத்துராஜவெல பிரதேசத்தில் உள்ள காணியொன்றை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, முத்துராஜவெல யுகதனவி மின் நிலையத்தை அண்மித்த 10 ஏக்கர் நிலத்தில் 300 மெகாவாட் திறன் கொண்ட எல்என்ஜி மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த காணியை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபையும் அனுமதி வழங்கியுள்ளது.


Leave a Reply