ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்காமல் ஓடி ஒளிகின்றனர் எதிரணியினர்! சபையில் சஜித் அணியைத் தாக்கினார் ரணில்

“என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் எவ்வாறு ஆட்சியைப் பிடிப்பது என்று தெரியாது இருப்பதை எண்ணி நான் கவலையடைகின்றேன்.”

இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தைப் பகிஷ்கரித்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இவர்களிடம் ஆட்சியைக் கொடுத்தாலும் ஓடி ஒளிகின்றனர். எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஓடி ஒளிகின்றனர். இவர்களை நினைத்துக் கவலையடைய வேண்டியுள்ளது.

எவ்வாறாயினும் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் இருந்தால் எதிர்க்கட்சியினர் தயக்கம் இன்றி சமர்ப்பிக்க முடியும். அவை நல்லதாக இருந்தால் மக்கள் அவர்களிடம் ஒப்படைப்பார்கள்” – என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply