போலி விசாவுடன் இங்கிலாந்து செல்ல முயன்றவர் கட்டுநாயக்கவில் கைது

சட்டவிரோதமான முறையில் இங்கிலாந்து செல்ல முயற்சித்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே குறித்த நபர் போலி விசா மற்றும் கடவுச்சீட்டுடன் விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

போலி விசா மற்றும் கடவுச்சீட்டுடன் ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல முற்பட்ட வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்

Leave a Reply