இன்று 2 மணிக்கு அதிகரிக்கிறது எரிபொருள் விலை! வெளியானது விலை விபரம்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று (26) பிற்பகல் 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளது.

அதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், புதிய விலை 470 ரூபாவாகும்.

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாவாகும்.

இதேவேளை ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 460 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 520 ரூபாவாக விலைகளில் இவ்வாறு திருத்தம் செய்யப்படவுள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply