கட்டாரிற்கு கஞ்சன விஜேசேகர மற்றும் நசீர் அஹமட் ஆகியோர் விஜயம்!

வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் கட்டாருக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று(திங்கட்கிழமை) நள்ளிரவு டோஹா நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயும் நோக்கிலேயே குறித்த இருவரும் கட்டாருக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று அதிகாலை டுபாய் நோக்கி பயணமாகியுள்ளார்.

ரஷ்யாவிற்கு விஜயம் செய்யும் நோக்கில் அவர் டுபாய் நோக்கி பயணித்துள்ளார்.

Leave a Reply