அம்பாறை இளைஞர்களுக்கு நாமல் கொடுத்த வாக்குறுதி

அம்பாறை மாவட்டத்திற்கு நாமல் ராஜபக்ச விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்டுள்ளார்.

இதன் போது, சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் குறைபாடுகள் மற்றும் அவசர தேவைகள் தொடர்பில் நாமல் ராஜபக்ச நேரில் சென்று பார்வையிட்டார்.

பொது ஜன பெரமுனவின் முக்கியஸ்தர் றிஸ்லி முஸ்தபாவின் அழைப்பின் பேரில் இங்கு விஜயம் செய்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் குறைபாடுகளை விரைவில் தீர்ப்பதற்காக முயற்சிகளை மேற்கொள்வதாகவும் இங்கு தெரிவித்தார்.

மேலும், இந்த விஜயத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்க உட்பட சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி முஹம்மட் ஹாறூன் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply