கப் ரக வாகனம் விபத்து: இருவர் உயிரிழப்பு!

வெலிமடை, ஊவாபரணகம பகுதியில் கப் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து ஊவாபரணகம, பேரவெல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

விபத்தில், கப் ரக வாகன சாரதி உட்பட அதில் பயணித்த மற்றுமொருவரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள்;, ஹக்கலை மற்றும் கலஹகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 36 வயதுடைவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply