வவுனியா, வேப்பங்குளம், மன்னார் வீதியில் இன்று பிற்பகல் கூலர் வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வீதியில் ஒரே திசையில் பயணித்து கொண்டிருந்த கூலர் வாகனம் திடீரென்று பிரேக் பிடித்து நின்றதால், பின்னால் வந்த முச்சக்கரவண்டி அதன் மீது மோதியுள்ளது.
இதன்போது, முச்சக்கரவண்டியை செலுத்திய சாhரதி காயமடைந்துள்ளமையோடு, முச்சக்கரவண்டியும் சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






