காலியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

காலி, ஹீனடிகல, பொல்துவ பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

உனவட்டுன, தலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த நபர் வட்டிக்கு பணம் கொடுப்பவர் எனவும் தகவல் கிடைத்துள்ளது

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இந்நபர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply