பதில் ஜனாதிபதியை ஜனாதிபதியாக்க மொட்டுக்கட்சி திட்டம்

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்வதை இலக்காக கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, இன்று நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளார்.

இந்த கூட்டத்தில் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட சிலர் கலந்துக்கொண்டதாக தெரியவருகிறது. கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளார்.

எனினும் அந்த யோசனைக்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமை பரிந்துரைத்துள்ளனர். இதன் காரணமாக கூட்டத்தில் பரப்ரப்பான வாத விவாதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிறசெய்திகள்

Leave a Reply