
தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, எனினும் தற்போதுள்ள வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளராக பலருடைய பெயர்கள் முன்மொழியப்படும் தற்போதைய சூழ்நிலை பாராளுமன்றத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
முன்மொழியப்பட்ட மூன்று வேட்பாளர்களில் யார் வெற்றி பெற்றாலும் அது பிளவை உருவாக்கும்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு தனி வேட்பாளரை கட்சித் தலைவர்கள் கலந்துரையாடி முன்மொழிவதே சிறந்த மாற்று வழி.
பாராளுமன்றத்திற்குள் ஏற்பட்டுள்ள இந்த பிளவு இனி வரப்போகும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஒரு பிரச்சினையாகவே முடிவடையும்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை.
வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டதன் பின்னர் இணக்கப்பாட்டிற்கு வரும் என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்





