
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது தற்போதைய முக்கியமான தருணத்தில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக் கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் நாடாளுமன்றம் ஆற்றுகின்ற பங்களிப்பை இந்தியத் தூதுவர் பாராட்டினார்.
அத்துடன் இலங்கையில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்தும் உறுதுணையாக இருக்கும் என்றும் இந்தியத்தூதுவர் சபாநாயகரிடம் தெரிவித்தார்.





