அத்துரலிய ரத்ன தேரர் விலகல்: எம்.பியாகிறார் ஞானசாரர் தேரர்?

நாடாளுமன்றத்தில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அத்துரலிய ரத்ன தேரர் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் ஜி.புஞ்சிஹேவ, கட்சியால் எழுத்துபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

கட்சியின் மத்திய குழு, அத்துரலிய ரத்ன தேரரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசந்த கொடிவக்கு தெரிவித்துள்ளார்.

கட்சியின் முடிவுகளுக்கு எதிராக செயற்படுவதாகவும் கட்சி மீது பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாகவும் தெரிவித்து கட்சியின் ஒழுக்காற்று குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Leave a Reply