‘மெட்டி ஒலி’ சீரியல் நடிகை காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி!

கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிய சீரியல் ‘மெட்டி ஒலி’. திருமுருகன் இயக்கத்தில் உருவாகிய இந்த சீரியலில் டெல்லி குமார், காவேரி உள்பட பலர் நடித்திருந்தனர் .

இந்த நிலையில் இந்த சீரியலில் விஜயலட்சுமி என்ற கேரக்டரில் நடித்திருந்த உமா மகேஸ்வரி என்ற நடிகை திடீரென இன்று காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மெட்டி ஒலி தொடர் மூலம் புகழ்பெற்ற உமாமகேஸ்வரி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவர் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 40 என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்டி ஒலி சீரியல் நடிகை உமா மகேஸ்வரி மறைவை அடுத்து சின்ன திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Trending

Leave a Reply