ரணிலுக்கே பொதுஜன பெரமுன ஆதரவு: சாகர காரியவசம்

கொழும்பு,ஜீலை 16

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கும் என்ற அறிவிப்பில் எவ்வித மாற்றமுமில்லை.
எனது அறிவிப்பு நிச்சயம் வெற்றி பெறும்.

ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பில் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் பதில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பதில் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷ பதவி விலகியதை தொடர்ந்து பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.

சமூக கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகளுக்கு ஒப்பீட்டளவிலாவது தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தோம்.

Leave a Reply