வாகனத்தின் இலக்கத்தகட்டின்படி எரிபொருள் வழங்கும் முறைமையில் திருத்தம்!

வாகன இலக்கத்தகட்டின் இறுதி எண்ணுக்கு ஏற்ப எரிபொருள் விநியோகிக்கும் திகதியில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, எரிபொருள் ஒதுக்கீட்டின் படி, எரிபொருள் நிரப்பு நிலையங்கள், இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் 0, 1, 2, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 3, 4, 5 மற்றும் புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 6, 7, 8, 9 ஆகிய எண்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என அமைச்சகம் அறிவித்தது.

பிறசெய்திகள்

Leave a Reply