தினேஸ் குணவர்தனவிற்கு பிரதமர் பதவி: விடுக்கப்பட்ட கோரிக்கை!

பொதுஜன முன்னணியின் தினேஷ் குணவர்தனவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தமிழ் கூட்டமைப்புடன் கூட்டணி வைத்துள்ள சஜித் பிரேமதாசவுடன், இணைந்துள்ள டலஸ் அழகப்பெருமவை என்னால் ஆதரிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

அத்துடன் , இவர்கள் இணைந்து அரசாங்கத்தை அமைப்பது பொருத்தமற்றது என தெரிவித்த பெரமுன எம்பி, தான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply