தமிழ் தேசியக்கூட்டமைப்பில் சிலர் ரணிலுக்கு வாக்களிப்பார்கள்: ஹரின்

கொழும்பு, ஜுலை 20

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தெரிவின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்கவுள்ளது.

இது தொடர்பான முடிவு நேற்று இரவு எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸின் செயலாளர் ஜீவன் தொண்டமான் இதனை அறிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ்தேசியக்கூட்டமைப்பு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பலர் டளஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க முடிவெடுத்துள்ளபோதும் அந்த கட்சிகளின் சிலர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply