பிரதமராக தினேஸ்; வாழ்த்து தெரிவித்த நாமல்!

இலங்கையின் 27 ஆவது பிரதமராக தினேஸ் குணவர்த்தன இன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் புதிய பிரதமருக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது வாழ்தை ருவிட்டர் பதிவினூடாக தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட தினேஸ் குணவர்த்தனவுக்கு எனது வாழ்த்துக்கள் நீங்கள் எங்கள் தேசத்திற்கு ஸ்திரத்தன்மையையும் செழிப்பையும் கொண்டு வர முடியும்! உன்னத மும்மூர்த்திகள் உங்களுக்கு வழிகாட்டட்டும்! என குறிப்பிட்டுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply