குரங்கு அம்மை குறைந்த வேகத்திலே பரவுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிப்பு

கொழும்பு,ஜுலை 25

குரங்கு அம்மை தொற்று கொரோனா தொற்றுடன் ஒப்பிடும் போது குறைந்த அளவிலான வேகத்திலேயே பரவுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உயிரியல் மூலக்கூறு விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சர்வதேசத்திற்கான எச்சரிக்கை அறிக்கை மாத்திரமே விடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இது தொற்று நிலைமைக்கான அறிவிப்பு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் இந்த தொற்றைக் கண்டறிய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்

Leave a Reply