ரணிலுடன் கைகோர்த்த ரஷ்யா!

கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் பிரகாரம் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மடெரி இன்றையதினம் காலை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிலையில்,ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு, ரஷ்ய ஜனாதிபதியால் அனுப்பட்ட வாழ்த்துக் கடிதத்தையும் கையளித்தார் என கூறப்படுகின்றது.

இதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பில் மேலதிக உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

பிற செய்திகள்

Leave a Reply