பல்லம – கட்டுபொத்த பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
பல்லம பகுதியில் வசிக்கும் 12 வயதுடைய சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுவன், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.
தற்போது குறித்த சிறுவனின் சடலம் சிலாபம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பல்லம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்






