உலக கிரிக்கெட்டின் தாயகம் (The Home of Cricket) என்று வர்ணிக்கப்படும் அதேவேளை கிரிக்கெட் உலகின் அனைத்து சட்டவிதிகளையும் இயற்றி (MCC Laws) இன்று வரைக்கும் சர்வதேச கிரிகட் கௌன்சிலுடன் (ICC) இனைந்து நடைமுறைப்படுத்தும், லண்டன் லோட்ஸ் மைதானத்தை பூர்வீகமாகக் கொண்ட மர்லிபோன் கிரிகட் கழகத்தின் (MCC, Est. 1787) வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட் போட்டியானது 23 ஜூன் 2026 அன்று இங்கிலாந்தின் Brighton நகரத்தில் இடம்பெற்றது.
மேற்படி இந்த கிரிக்கெட் போட்டிக்கு கல நடுவராக மூதூரைச்சேர்ந்த இலங்கை கிரிகட் நடுவர் சிஹான் சுஹூட் கடமை ஆற்றியிருந்தார்
குறித்த போட்டியானது இங்கிலாந்தில் உள்ள பிரபல கல்லூரிகளில் ஒன்றான லான்சிங் கல்லூரி (Est. 1857) மற்றும் மர்லிபோன் கிரிகட் கழகம் ஆகிய இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்றது. சுமார் நூறு வருடங்களுக்கும் மேலாக தொடர்சியாக இடம் பெற்று வரும் வரலாற்று ரீதியான கோடை பருவகால போட்டியே இதுவாகும். மேற்குறிப்பிட்ட வரலாற்று சிறப்புமிக்க போட்டியொன்றில் இலங்கை கிரிகட் சபையின் நடுவர் ஒருவர் நடுவராக கடமையாற்றுவது இதுவே முதல் தடவையாகும்.
இங்கிலாந்தின் சஸெக்ஸ் பிராந்திய முதல் தர நடுவர்களில் ஒருவராக கடந்த நான்கு ஆண்டுகளாக கடமை புரியும் சிஹான் சுஹூட் இங்கிலாந்து கிரிகட் சபையானது (ECB ACO) மேற்படி போட்டிற்கு நடுவராக பணி அமர்த்திருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இவ்வாறான வரலாற்று சிறப்புமிக்க போட்டிக்கு நடுவராக கடமைபுரிய சந்தர்ப்பம் கிடைத்ததானது இலங்கை கிரிகட் நடுவரொருவருக்கு பிரித்தானிய மண்ணில் கிடைத்த ஒரு கௌரவமாகவே நோக்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும்.
கிரிகட் நடுவர் சிஹான் சுஹூட் இலங்கை கிரிகட் சபையின் தரம் மூன்றின் நடுவரும் (SARA Panel), இங்கிலாந்து கிரிகட் சபையின் தரம் இரண்டின் நடுவருமாவார்.
மேலும் சிஹான் சுஹூட் அவர்கள் 2023 தொடக்கம் 2025 வரை இங்கிலாந்து கிரிகட் சபையின் அசோசியேடட் நடுவராக கடமையாற்றிய அதேவேளை 2026 ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிகட் சபையினால் நிரந்தர நடுவர் அங்கத்துவத்திற்கு தரமுயர்வும் செய்யப்பட்டார்.
மேலும், உலக கிரிக்கெட்டின் அடையாளம் என்று வர்ணிக்கப்படும் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் The Marylebone Cricket Club (MCC) இற்கு இலங்கை கிரிக்கட் லெஜெண்ட்களில் ஒருவரான முன்னால் தலைவர் குமார் சங்கக்கார அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைவராக கடமையாற்றி இருந்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.





