இளைஞனை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை – சரத் வீரசேகர

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சராசரியாக தாக்குதலை நடத்திய பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மோட்டார் வண்டியில் பயணித்தவரை பொலிஸார் நிறுத்தியபோதும் அதனை பொருட்படுத்தாமல் குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகின்றது.

இதன் பின்னர் குறித்த நபரை பின்தொடர்ந்துவந்த பொலிஸ் அதிகாரி இடையில் மறித்து அந்த நபர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் அதிகாரி தாக்கும் வகையிலான காணொளி வெளியாகி நேற்று பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பொலிஸ் அதிகாரிக்கு தாக்குதலை நடத்த எந்த உரிமையும் இல்லை என தெரிவித்துள்ள சரத் வீரசேகர, சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Leave a Reply