நாட்டில் சீனிக்கு கடும் தட்டுப்பாடு..!

தற்போதைய கட்டுப்பாட்டு விலையில் உள்ள சீனியை மொத்த விலையில் விற்பனை செய்ய முடியாது என சீனியை இறக்குமதி செய்யும் முன்னனி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டிற்கு சீனியை இறக்குமதி செய்யும் முன்னணி நிறுவனங்களுக்கும் நிதி அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்துள்ளனர்.

தற்போது சந்தையில் சில கடைகளில் சீனி கிலோ ரூ.160க்கு விற்கப்படுகின்ற நிலையில், சீனி தட்டுப்பாடு மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், நுகர்வோர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

சீனி போதியளவு கையிருப்பு இல்லாததால் சீனி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலைமையில் சீனிக்கான தட்டுப்பாடு நிலவுவதால் சீனியின் விலை அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply