திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மத்தியஸ்த சபையின் சேவைகள் இன்று (23) முதல் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக திருகோணமலை மத்தியஸ்த சபையின் உதவி தவிசாளரான பி.லோஜினி தெரிவித்துள்ளார்.
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்ட திருகோணமலை மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
அதன்படி, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மட்கோ கிராமத்தில் நேற்று வெள்ளிக் கிழமை காணி கச்சேரி இடம்பெறுள்ளது.
மேலும், பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் பொ. தனேஸ்வரன் தலைமையில் காணி கச்சேரியில், காணிக்கானஅனுமதிப் பத்திரம் வழங்கப்படாதவர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், திருகோணமலை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மத்தியஸ்த சபை இன்று சனிக்கிழமை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக உதவி தவிசாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், குறைந்த அளவிலான பிணக்குகள் மாத்திரமே விசாரணைக்கு எடுக்கப்படும்.
எதிர்வரும் காலங்களில் சனி மற்றும் ஞாயிறுக் கிழமைகளில் திருகோணமலை மத்தியஸ்த சபையின் சேவைகள் தொடந்து இடம்பெறும்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இதில் மூவின மக்களும் கலந்து கொண்டனர் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.







