சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில், மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதன்படி, பம்பலப்பிட்டியை சேர்ந்த 56 வயதான வர்த்தகர் ஒருவரின் புதல்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஐவரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணை, 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சதொச நிறுவனத்துக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட சுமார் 150 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்ட சுமார் 56,000 கிலோகிராம் வரையிலான இரு வெள்ளைப்பூண்டு கொள்கலன்கனை, உயர் அதிகாரிகளின் எந்த அனுமதியும் இன்றி மூன்றாவது தரப்பொன்றுக்கு விற்பனை செய்த விவகாரத்தில் ஏற்கெனவே ஐவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், ஆறாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த நபரை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.






