இலங்கையில் முதற்தடவையாக உருவான தேசிய தரவுத்தளம்

இலங்கையில் முதற்தடவையாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மற்றும் பாதுகாப்பற்ற அனைத்து சிறுவர்களின் தரவுகளையும் உள்ளடக்கிய தேசிய தரவுத்தளம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமையில் இந்த தரவுத்தளம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ், கிராம உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், அதிபர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் நேரடியாக இந்த தரவுத்தளத்தில் தகவல்களை பதிவேற்றம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிறுவர்கள் முகங்கொடுக்கும் இன்னல்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 24 மணிநேரமும் இயங்கும் 1929 என்ற இலக்கத்திற்கு அறியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

Leave a Reply