ஏறாவூரில் இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்!

மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் இளைஞர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள், தாம் வழங்கிய சைகையை மீறிச் சென்றமையால் துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தனர்.

இச்சம்பவம் காணொலியாக நாடு முழுதும் பரவிய நிலையில் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply