புங்குடுதீவுஇ ஊரதீவில் அமைந்துள்ள வீடொன்றை பத்து பேர் கொண்ட குழுவினர் முற்றாக தீக்கிரையாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றுள்ளது.
இவ் வீடுஇ சுவிஸ் நாட்டில் வசிக்கும்இ சமூக சேவகர் சிவானந்தனின் வீடு எனத் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் சில மோதல் குழுவினரையும் இணைத்தே இவ் நாசகார தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடுஇ வாள்களாலும் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பில்இ ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில்இ மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






