
மட்டக்களப்பு – ஏறாவூரில் இரண்டு இளைஞர்களை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி இன்று (சனிக்கிழமை) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரி தாக்கும் வகையிலான காணொளி வெளியாகி நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.
இந்நிலையில் பொலிஸ் அதிகாரிக்கு தாக்குதலை நடத்த எந்த உரிமையும் இல்லை என தெரிவித்த சரத் வீரசேகர, சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.





