பருப்பு, கோழி இறைச்சி உள்ளிட்ட பல பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

சீனி, பருப்பு, கோழி இறைச்சி, உருளைக்கிழங்கு, பால்மா மற்றும் டின் மீன் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை அரசாங்கம் நீக்கியுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தல், நேற்று (03) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை நீக்குகிறது.

இதனால் சந்தையில் மேற்கண்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.

Leave a Reply