வெலிகமயில் வெடிப்புச் சம்பவமொன்று பதிவு – மூவர் காயம்!

<!–

வெலிகமயில் வெடிப்புச் சம்பவமொன்று பதிவு – மூவர் காயம்! – Athavan News

வெலிகம – கப்பரதொட்ட பகுதியில் உள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த மூவரும் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிற்றுண்டிச்சாலையில் இன்று (வியாழக்கிழமை) காலை சிற்றூண்டிச்சாலையின் எரிபொருள் சிலிண்டர் வெடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply