சஜித் அலுவலகத்தில் தீபாவளி கொண்டாட்டம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அவரின் அலுவலகத்தில் விசேட தீபாவளி உற்சவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இருளை அகற்றி ஒளியைப் பெற்றுக் கொள்வதற்கு பல்லாயிரக்கணக்கான ‘விளக்குகளை’ ஏற்றி பிரார்த்தனை புரிகின்ற உலக வாழ் இந்து பக்தர்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் என பிரார்த்தனை செய்த வண்ணம் இந்நிகழ்வு இடம்பெற்றது.

ஐக்கிய மகளிர் சக்தியின் உப தலைவர் உமாசந்திர பிரகாஸின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந் நிகழ்வில், மனோ கணேசன், பழனி திகாம்பரம், புத்திக பத்திரன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அலுவலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply