ஆண் நண்பருடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ருதிஹாசன்

தமிழ் தெலுங்கு திரையுலகின் நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த சில மாதங்களாக சாந்தனு ஹசாரியா என்பவருடன் நட்பின் உள்ளார் என்றும் இந்த நட்பு விரைவாக காதலாக மாறும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

பொது இடங்களில் இருவரும் ஒன்றாக கலந்து கொள்ளும் காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன .

இந்த நிலையில் தீபாவளி தினத்தை முன்னிட்டு ’எங்கள் மனம் நிறைந்த தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு புகைப்படம் என்றும், உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தில் சுருதிஹாசன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாந்தனு ஹசாரியா ஆகிய இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் காதலிப்பதாக இன்னும் முறைப்படி அறிவிக்கவில்லை என்றாலும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை இருவரும் இணைந்து வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply