நிலவும் சீரற்ற வானிலை – சங்கானையில் 38 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்.மாவட்டத்தில் நேற்று(திங்கட்கிழமை) இரவு முதல் பெய்து வரும்  அதிக மழை வீழ்ச்சி காரணமாக சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 38 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

சங்கானை பிரதேச செயலகப் பிரிவின் j/179 கிராம சேவகர் பிரிவில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 4 குடும்பத்தினர் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனரென தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் மாவட்டத்தில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று(செவ்வாய்கிழமை) விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply