Today Rasi Palan 18th November 2021 | இன்றைய ராசிபலன்

Today Rasi Palan 18th November 2021 | இன்றைய ராசிபலன் : நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பிலவ வருடம் கார்த்திகை 2ஆம் தேதி நவம்பர் 18,2021 வியாழக்கிழமை. சதுர்த்தசி திதி பகல்12.00 மணி வரை அதன் பின் பவுர்ணமி. பரணி நட்சத்திரம் இரவு 01.29 மணி வரை அதன் பின் கிருத்திகை நட்சத்திரம்.

சந்திரன் மேஷ ராசியில் பயணம் செய்கிறார். கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம் – சந்திரன் இன்று உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும்.நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் தனித் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

ரிஷபம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். வேலை விஷயமாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகமாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம் கவனம் தேவை.

மிதுனம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினை நீங்கும்.

கடகம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வேலையில் உற்சாகம் பிறக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

சிம்மம் – சந்திரன் சஞ்சாரம் பாக்ய ஸ்தானத்தில் உள்ளதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் சேமிப்பு பெருகும்.

கன்னி – சந்திரன் சஞ்சாரம் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். அறிமுகம் இல்லாத நபர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். வெளியிடங்களில் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். இரவு நேர பயணங்கள் வேண்டாம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் கவனம் தேவை. பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம்.

துலாம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். ராசியில் உள்ள செவ்வாய் மீது சந்திரன் பார்வை விழுவதால் சந்திர மங்கல யோகம் கை கூடி வந்துள்ளது. இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.

விருச்சிகம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் வீடு தேடி வரும்.

வார ராசி பலன் : நவம்பர் 15 முதல் நவம்பர் 21 வரை

தனுசு – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் உண்டாகும். உடன்பிறப்புக்கள் வழியில் மனநிம்மதி குறையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் கவனம் தேவை. பிள்ளைகளால் பெருமை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மகரம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

கும்பம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம் – சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply