ஐந்து மாவட்டங்களில் கொரோனா கொத்தணி அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன நிலைமை மோசமடையலாம் என எச்சரித்துள்ளார்.
அதன்படி அனுராதபுரம், அம்பாறை, அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி மாவட்டங்களில் கொரோனா கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்களை மீறி குறிப்பிட்ட பகுதிகளில் இடம்பெற்ற திருமணங்கள், மதநிகழ்வுகள் ஏனைய நிகழ்வுகள் காரணமாக இந்த கொத்தணிகள் உருவாகியுள்ளன.
சுகாதார வழிமுறைகளை மீறி பொதுமக்பொதுமக்கள் ஒன்றுகூடினால் எங்களால் இந்த கொத்தணிகளை தடுக்க முடியாமல் போய்விடும் என மேலும் அவர் எச்சரித்துள்ளார்






