
அந்தமான் நிகோபர் தீவின் போர்ட்பிளேர் நகரில் காலை 9 மணியளவில் 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை 6.30 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் பதிவான நிலையில் அடுத்த சில மணிநேரங்களில் கடும் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகள் மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் உள்ளதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
கடந்த சில மாதங்களாவே அங்கு அடிக்கடி நிலநடுக்கம் உணரப்படுகிறது. கடந்த வாரங்களில் 2 நில நடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலையில் அந்தமான் தீவில் போர்ட் பிளேரில் இன்று காலை 6.27 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள்குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
அடுத்த சில மணிநேரங்களில் காலை 9 மணியளவில் போர்ட் பிளேரில் கடும் நில நடுக்கம் உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கின. இது 6.1 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இது சேத விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
மிக கடுமையான நிலநடுக்கத் தாக்கத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ள பகுதியில் அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரே நாளில் 5 முறை நில நடுக்கம் பதிவானது. இன்று அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.