பாராளுமன்ற நுழைவு வீதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது

பத்தரமுல்ல – ஜயந்திபுரவில் உள்ள பாராளுமன்ற நுழைவு வீதிக்குள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஆர்ப்பாட்டப் பேரணி நுழைய முற்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திவரும் ஆர்ப்பாட்டப் பேரணியே நுழைய முயன்றுள்ளது.

இதனையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply