மக்கள் தொடர்பான திட்டங்கள் இல்லாதவர்கள் எங்களை விமர்சனம் செய்ய அருகதையற்றவர்கள்- பூ.பிரசாந்தன்

மக்கள் தொடர்பான எந்த திட்டமும் இல்லாதவர்கள் எங்களை விமர்சனம் செய்வதற்கு அருகதையற்றவர்கள் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பூ.பிரசாந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “சிறுமி ஹிசாலினிக்கு ஏற்பட்ட சம்பவம்போன்று எதிர்வரும் காலங்களில் இடம்பெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மேலும் சிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்தை சிலர் அரசியலாக்க முயற்சிக்கின்றனர்.

மேலும் சிலர், தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து செல்லுகின்றமையினால் இஸ்லாமிய மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் முனைப்பில் செயற்படுகின்றனர்.

இதேவேளை ஒரு கட்சியில் நிரந்தரமாக நின்று அரசியல் செய்ய முடியாதவர்கள், மக்கள் தொடர்பான எந்த திட்டமும் இல்லாதவர்கள் எங்களை விமர்சனம் செய்வதற்கு அருகதையற்றவர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply