தங்கைக்கு சுயமாக ஆங்கிலத்தில் எழுத முடியாது – ஹிஷாலியின் சகோதரன்

தமது சகோதரிக்கு சுயமாக ஆங்கிலத்தில் எழுத தெரியாது என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினியின் சகோதரர் தெரிவித்தார்.

மேலும் தமது சகோதரிக்கு ஆங்கில எழுத்துக்களை பார்த்து எழுத முடியுமே தவிர, ஆங்கிலத்தில் சுயமாக எழுத முடியாதென அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில சொற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் அந்த அறையை பரிசோதனைக்குட்படுத்திய குறித்த ஆங்கில சொற்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில் ‘என் சாவுக்கு காரணம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.அந்த எழுத்துக்கள் இரசாயன பகுப்பாய்வு நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன் இது தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.எனினும் இந்நிலையில் இது குறித்து கருத்துரைத்த அவரது சகோதரர் தமது சகோதரி தரம் 7 வரையிலேயே பாடசாலையில் கல்வி கற்றிருப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply