கல்முனை மாமாங்க வித்தியாலய மைதானத்துக்கு குறுக்காக வீதி – பொலிஸில் முறைப்பாடு!

கல்முனை மாமாங்க வித்தியாலயத்துக்கு குறுக்காக கடற்கரை வீதி அமைவதற்கு எதிராக பாடசாலை அதிபர் திருமதி ஜெனிதா அருள்ஞானமூர்த்தி கல்முனை மாநகசைபை 12 ஆம் வட்டார உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் குறித்த மைதானத்தில் விளையாடி வரும் சைனிங் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் நேற்று (18) முறைப்பாட்டை செய்திருந்தனர்.

மைதானத்துக்கு குறுக்கே செல்லும் வீதி சற்று அகன்று செல்லவேண்டும் எனவும் இவ்வீதி மைதானத்திற்கு குறுக்கே செல்வது மைதானத்தை பாதிக்கும் என்றும் பாடசாலை அதிபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை செய்திருந்தார்.

புதிதாக அமையவுள்ள கடற்கரை காபட் வீதி அமையும் போது குறித்த மைதானத்திற்கு பாதிப்பில்லாமல் வீதியை அமைக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். குறித்த இடத்தில் மைதானத்திற்கும் கடற்கரைக்கும் இடையில் போதிய இடம் இருந்தும் ஏன் மைதானத்திற்கு குறுக்காக வீதியை அமைக்க முனைகின்றார்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a Reply