யாழ்.உயரப்புலம் பகுதியில் காணாமல்போன முதியவர் சடலமாக கண்டெடுப்பு!

சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன முதியவர் கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனைக்கோட்டை உயரப்புலம் பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்தே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர் கடந்த சில தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்கள் வரை தேடி வந்துள்ளனர். காணாமல் போனமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) உயரப்புலம் பகுதியிலுள்ள பொதுக்கிணற்றில் இருந்து முதியவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply