‘மெனிகே மகே ஹிதே’ யொஹானிக்கு பாராளுமன்றத்தில் பாராட்டு நிகழ்வு

‘மெனிகே மகே ஹிதே’ பாடலின் பாடகியான, யொஹானி திலோகா டி சில்வாவைப் பாராட்டும் நிகழ்வு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (23) நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வை, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

இதனை, ஒன்றியத்தின் செயலாளரும் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

எனினும் சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றி இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக குஷானி ரோஹணதீர மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, ‘மெனிகே மகே ஹிதே’ பாடல் தற்பொழுது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மிகவும் பிரபலமாகியுள்ளமை குறிபிடத்தக்கது.

Leave a Reply