போர் வெற்றிகளை நினைவு கூறும் சின்னங்கள் அமைக்கப்படக் கூடாது! அகலகட சிறிசுமண தேரர்

போர் வெற்றிகளை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்படக் கூடாது என அகலகட சிறிசுமண தேரர் தெரிவித்துள்ளார்.

‘சந்தஹிரு சேயா’ நிர்மாணிப்பு தொடர்பில் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

உலக பக்தர்கள் அனைவரும் வழிபடும் வகையில் அனுராதபுரத்தில் அமைக்கப்பட்ட ´சந்தஹிரு சேயா´ தூபி ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

யுத்த வெற்றியை நினைவுகூரும் வகையில் சந்தஹிரு சேயா நிர்மாணிக்கப்பட்டது.

இது தோல்வியடைந்த மக்கள் மீது வெறுப்புணர்வை தூண்டும் நெருப்பு எனவும் இது ஆரம்பிக்கப்பட்ட போது தாம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

இதனால் சிங்கள பௌத்தர்கள் மற்றும் சில படைவீரர்களே இந்த நிர்மாணத்தில் மகிழ்ச்சி அடைவார்கள் என கூறியதோடு, எல்லோரும் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் அவர் சுட்டிக்காட்டினார்

சந்தஹிரு சேயா தூபி தாய்நாட்டின் ஒற்றுமைக்காக பெரும் தியாகங்களைச் செய்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையிலும் முப்பது வருடகால யுத்தத்தின் முடிவைக் குறிக்கும் முகமாகவும் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply